News June 14, 2024

மதுரையில் 1800 கடைகளுக்கு நோட்டீஸ்

image

மதுரை மாநகராட்சியில் சொத்து, கடை, தொழில், பாதாளச் சாக்கடை, குடிநீர் வரிகள், குத்தகை வருவாய் வசூலிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 1800க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகளில் நீண்ட நாட்களாக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நிலுவை வரியை வசூலிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

மதுரை: ரயில் பயணிகளுக்கு இது தேவை!

image

தமிழில் தகவல் பெற;

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

மதுரை: ரூ.4,400 கோடியிலான திட்டங்கள் துவக்கம்

image

மதுரைக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை (பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். என்எச் 332ஏ ( மரக்காணம் – புதுச்சேரி) மற்றும் என்எச்-87 (பரமக்குடி – ராமநாதபுரம்) ஆகிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறார்.

News March 1, 2026

மதுரை: கண்மாயில் சிறுவனின் சடலம்

image

மதுரை திருமால்­பு­ரம் மருதங்­கு­ளத்தை சேர்ந்­த­வர் புரு­ஷோத்­த­மன் மகன் சஞ்­சய் (11). இவர் 6 ம் வகுப்பு படித்து வந்தார். நண்­பர்­க­ளு­டன் மரு­தங்­கு­ளம் கண்­மாய்க்கு நேற்று குளிக்­க சென்­றார். சிறு­வனுக்கு நீச்­சல் தெரியாததால் தண்­ணீரில் மூழ்கி உயிரிழந்­தார். போலீ­சார் சிறு­வன் உடலை கைப்­பற்றி பிரேத பரி­சோத­னைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!