News November 18, 2024
மதுரையில் 101 பேருக்கு காய்ச்சல்
மதுரை மாவட்டத்தில் வைரல் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த மாதம் தினமும் 20 நபர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் அந்த எண்ணிக்கை அதிகரித்து தினமும் சராசரியாக 40 நபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 101 நபர்கள் உள் நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2024
மதுரை சிறைக்கு 89 ஏக்கரில் செம்பூரில் இடம் தேர்வு
மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2024
ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ரயில் சேவை
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜோலார்பேட்டை, ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை வழியாக கொல்லத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து இந்த ரயில் நாளை(நவ.20) முதல் வரும் ஜன. மாதம் 15ந் தேதி வரை மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 21ம் முதல் ஜன.21வரை இயக்கப்படுகிறது.
News November 19, 2024
மதுரையில் 21ம் தேதி கும்பாபிஷேகம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான, கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகர் கோயில், சுடுதண்ணீர் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில், எழுகடல் தெரு காஞ்சன மாலையம்மன் கோயில் ஆகிய கோயில்களில் 21ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.