News December 24, 2025

மதுரையில் வைரலான புதிய சாலை.!

image

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 28, 2025

மதுரை: பத்திர எழுத்தாளரை கத்தியால் குத்திய சிறுவன்

image

மதுரை ஜெய்ஹிந்த்­பு­ரம் முருகன்(53) பத்­திர எழுத்­த­ராக உள்ளார். அப்பகுதி­யை சேர்ந்த 17 வயது சிறுவன் வீட்டிற்கு அடங்­காமல் சுற்ற, அவரது தாய்க்கும் மகனுக்கும் எந்­த­ சம்­பந்­த­மும் இல்லை என பத்­தி­ரத்­தில் எழுதி வாங்கினர். முருகன் பத்­தி­ரத்தை எழுதி கொடுத்ததால் ஆத்­தி­ரம­டைந்த சிறுவன் மற்­றொரு சிறுவனுடன் வந்து அவரை கத்­தியால் குத்தியுள்ளார். திடீர்நகர் போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

News December 28, 2025

மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை.!

image

மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் நாகப்பிரகாஷ்(54). மது போதைக்கு அடிமையான இவரை மனைவி சுப்புலட்சுமி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நாக பிரகாஷ் நேற்று (டிச.27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மேலூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 28, 2025

மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

மதுரை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!