News November 19, 2025
மதுரையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை

மதுரை, எம்.கே.புரத்தில் பல வழக்குகள் உள்ள முத்துமணி போஸ்(28) நேற்று இரவு அப்பகுதி மதுபான கடையில் மது அருந்தும் போது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறியது. அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கியுள்ளார். ஆத்திரமுற்ற அந்த நபர் தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி, ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 29, 2026
மதுரை: தேர்தல் படையிடம் சிக்கிய ரூ.10 லட்சம்

சட்டமன்ற தேர்தல் பணம், நகை எடுத்துச் செல்வது குறித்து தேர்தல் வழிகாட்டி முறைகள் அறிவித்த போதிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நகை, பணம் பறிமுதல் செய்யப்படுறது. மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளில் நேற்று உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்து மதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News March 29, 2026
மதுரை: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். *ஷேர்
News March 29, 2026
BREAKING மதுரை: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நிலையில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
மேலூர் – மதுரைவீரன்
மதுரை கிழக்கு – கார்த்திகேயன்
சோழவந்தான் (தனி) -கருப்பையா
மதுரை வடக்கு – கல்லாணை
மதுரை தெற்கு -பீட்டர்
மதுரை மத்தியம் – முஸ்தபா
மதுரை மேற்கு -தங்கபாண்டி
திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல்குமார்
திருமங்கலம் -சதீஸ்குமார்
உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்


