News January 1, 2026
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News January 31, 2026
மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியர்

மதுரை எச் எம் எஸ் காலனி அருணாச்சலேஸ்வரர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி இசக்கி நாச்சியார். தம்பதியர் இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு மோசடி செய்ததாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
News January 31, 2026
மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு நிரந்தரமாக வேலை கிடைக்காமல் மதுரைக்கு திரும்பி வந்தார். இங்கும் சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
மேலூர் அருகே 4 வழிச்சாலை கார் விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் பைக்கில் நேற்று சென்ற போது, வெள்ளமலைப்பட்டி சந்திப்பு அருகே, நாகர்கோயிலை சேர்ந்த ரெம்மிங்டன் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


