News October 27, 2024

மதுரையில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

image

மதுரை மாவட்டத்தில், தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகள்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, 0452- 230 8216 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 3, 2026

மதுரையில் 16 பவுன் நகை கொள்ளை

image

மதுரை கூடல்புதூர் ராம் முனிநகர் ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனை கண்காணித்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் ஒரு வீட்டில் 8 பவுன், மற்றொரு வீட்டில் 8 1/2 பவுன் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News February 3, 2026

மதுரை: வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு

image

செல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(47) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் ஜராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த காரல்மார்க்ஸ் என்பவர் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

மதுரை: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

image

மதுரை அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன்(29) என்பவர் சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பொற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாகரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!