News January 31, 2025
மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ அதிரடி கைது

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர், சில மாதங்களுக்கு முன்பு, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு தொடர்ந்தார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் கவிதாவிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. நேற்று கவிதாவிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது சார்பாய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது : மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருள் மற்றும் மதுபால் குடும்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆச்சு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் போதை கும்பல், ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
News March 1, 2026
Flash திமுகவிற்கு மதுரை வேப்பங்குட்டையாக உள்ளது: மோடி

திமுக அரசு தமிழ்நாட்டை கொள்ளை அடித்துள்ளது. எம்ஜிஆர்க்கு உற்றதுணையாக இருந்த மதுரையை திமுகவிறக்கு மதுரை வேப்பங்கோட்டையாக உள்ளது. தூய்மையான நகரம் வரிசையில் மதுரையை தரைமட்ட அளவுக்கு கொண்டு போனார்கள். லஞ்சத்தால் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுகவிற்கு காசு மட்டும் தான் பிரச்சனை மக்களுக்கு என மோடி கூறினார்.
News March 1, 2026
BREAKING பக்தர் உயிரிழப்பு; வாய்மை வெல்லும்: மோடி

மதுரை மண்டலா நகரில் தேசிய ஜானநாயகி கூட்டணி மாநாட்டில் வெற்றிவேல் என உரையை தொடங்கிய மோடி பேசியதாவது: பூர்ண சந்திரன் என்னும்இளம் பக்தர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பூர்ண சந்திரன் குடும்பத்தை சந்தித்து எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தேன். பூரண சந்திரன் உயிரிழப்பு சம்பவத்தில் உண்மை வெல்லும்.


