News March 13, 2025

மதுரையில் முதல்வர் மருந்தகத்தால் 4,288 பேர் பயன்

image

மதுரை நோயாளிகள் அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது, நீரழிவு ரத்த அழுத்தம் பல்வேறு பாதிப்புகளினால் தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டிய நோயாளிகள் கவலை அடைந்தனர். அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் 50 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன இவற்றின் மூலம் நேற்று வரை 4,288 பேர் பல்வேறு வகையான மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

Similar News

News April 3, 2026

BIG BREAKING மதுரை: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மதுரை தெற்கில் பாஜக சார்பில் ராமஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 3, 2026

மதுரை: மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகின்றனர் – செல்லூர் ராஜு

image

மதுரை வடக்கு தொகுதியில் நேற்று தே.ஜ கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு விரும்புகிறார்கள் எனவே மதுரையில் 10 தொகுதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என்றார். டாக்டர் சரவணன் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னும் ஒரே மாதத்தில் அதிமுக ஆட்சி மலர போகிறது. அதிமுக தேர்தல் அறிக்கை மணக் கும் மல்லிகையாக உள்ளது என்றார்.

error: Content is protected !!