News October 25, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

மதுரை: மாடு முட்டியதில் வாலிபர் பலி

image

சிவகங்கை அருகே மேலசாளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தைப்பூச திருவிழாவையொட்டி மேலூர் அருகே செம்மனிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு காண தனது நண்பருடன் வந்தார். அப்போது மாடு முட்டியதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 4, 2026

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

image

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் உள்ள பழனிக்குமார், ஜெயப்பிரியா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 4, 2026

மதுரை: டாஸ்மாக்குள் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சார்ந்த பாலா என்பவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக மதுரை முல்லைநகர் பகுதியில் வசித்ததுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மனைவி பிரிவால் கவலையில் மது அருந்தி வந்தாக தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை பிபி குளம் டாஸ்மாக் கடைபாரின் ஆஸ்பெட்டாஸை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, மது குடித்த நிலையில் பின்னர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!