News March 26, 2024
மதுரையில் பிறப்பித்த அதிரடி உத்தரவு

மதுரை மாநகரில் இறுதி ஊர்வலத்தின்போது போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பேனர் நிறுவக்கூடாது, மலர்வளையம், பூமாலைகள் சாலை, வாகனங்களின் மீது தூவக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை மீறி மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News April 15, 2025
அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 15, 2025
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு M.Sc, ME/M.Tech, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை தகுதிகேற்ப மாத ஊதியம்வழங்கப்படும். இங்கு <
News April 15, 2025
மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க