News January 13, 2026
மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.
Similar News
News January 29, 2026
திருமங்கலம் அருகே 2 மாத குழந்தை மரணம்

திருமங்கலம் அருகே அழகுசிறையில் கருணை இல்லம் செயல்படுகிறது. கடந்த 12-ம் தேதி குழந்தைகள் நல குழு மூலமாக காப்பகத்தில் 2 மாத பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பாரதி என பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை பிறந்த போது அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காப்பகத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது.

மதுரை: நகை கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

பரவை பேங்க் காலனியைச் சேர்ந்த சரவணன் நகை கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்த போது கண்காணிப்பு கேமரா ஒயர்கள் துண்டிக்கப்பட்டு, பின்புற சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்ம ஆசாமிகள் கடையின் பின்பக்கம் இருந்து சுவரை துளையிட்ட போது கடையில் இருந்த அலாரம் ஒலி எழுப்பியதால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.