News May 15, 2024

மதுரையில் பயனடைந்த 1 லட்சத்து 14 ஆயிரம் பேர்!

image

மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1,545 பள்ளிகளைச் சார்ந்த 1,14,095 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற நோக்கில் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News November 2, 2025

மதுரை: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

image

மதுரை மாவட்டத்தில் 69 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <>இங்கு க்ளிக்<<>> செய்து மதுரைக்கான விண்ணப்பத்தை படிக்கவும். பின்னர் கிழே APPLY தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில், உங்கள் சுய விவரங்கள், சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி நாள்: நவ. 9; சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் SHARE பன்னுங்க.

News November 2, 2025

மதுரை: அறுவை சிகிச்சையால் பாதிப்பு.. ரூ.10 லட்சம் இழப்பீடு

image

மதுரையை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மதுரை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், அறுவை சிகிச்சையின் போது, அலட்சியத்தால் நிரந்தர நோயாளியாக மாற்றப்பட்டுள்ளதாக இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மருத்துவரின் அலட்சியத்தால் மனுதாரர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

News November 2, 2025

மதுரை: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!