News September 11, 2025
மதுரையில் தினமும் ரூ.800 ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி

மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர கட்டுமானத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். செக்கானுாரணி, கே.புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்.15 முதல் 21 வரை பயிற்சி நடக்கிறது. பங்கேற்போருக்கு தினமும் ரூ.800 ஊக்கத் தொகை, உணவிற்கு ரூ.150 வழங்கப்படும். விரும்புவோர் எல்லீஸ்நகர் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தை அனுகலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News September 11, 2025
மதுரையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. மதுரை-பரூணி சிறப்பு ரயில் வண்டி எண் 06059 மதுரையில் இருந்து வருகிற 17-ஆம் தேதி 24ஆம் தேதி மற்றும் நவம்பர் 3,15 ,22, 29 இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று மறு மார்க்கமாக வண்டி எண் 06060 வருகிற 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்.
News September 11, 2025
மதுரையில் ஒரே நாளில் 10 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் பசும்பொன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று வாசல் தெளித்து கொண்டிருந்த மூதாட்டி, வயலில் வேலை செய்த விவசாயி, வீட்டின் முன் பாத்திரம் துலக்கிய சிறுமி, பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் என 10பேரையும், ஆடு,மாடு, கோழிகளை கடித்து குதறியது. காயமடைந்தவர்கள் ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உங்க கருத்தை கீழே பதிவிடலாம்.
News September 11, 2025
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.