News May 17, 2024
மதுரையில் டெங்கு சிறப்பு வார்டு தயார்…!!

மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வாா்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டில் கொசுவலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு உள்ளது.
Similar News
News September 19, 2025
மதுரையில் கள்ளக்காதலன் தலையில் கல்லை போட்ட பெண்

வண்டியூர் பொன்ராம் மகன் அரவிந்த் சரத். இவர் 2019ல் திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்தார். பின் தன்னுடன் கட்டட வேலைபார்த்த மணிகண்டன் மனைவி பூபதியுடன் 29, பழகி அதலை பகுதியில் இருவரும் வசித்தனர். பூபதி நடத்தையில் அரவிந்த்சரத் சந்தேகப்பட்டு தகராறு செய்து தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் செப்.17 இரவு அரவிந்த் தலையில் பூபதி கல்லை துாக்கி போட்டதில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
News September 19, 2025
மதுரை-குருவாயூர் ரயில் பகுதியளவு ரத்து

மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண். 16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
News September 19, 2025
மதுரையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய நாய்

மதுரை மாநகராட்சி 45 ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் குமரன்குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளிக்கு சென்றபோது தெருநாய் விரட்டி கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம், கால் ஆகிய பகுதிகளில் கடும் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.குழந்தைகள் வைத்திருபோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்கு சொல்லுங்க.