News March 26, 2025
மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*
Similar News
News August 11, 2025
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆடு கோழி பலியிட்டு கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உள்ளதா எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை தரப்பில் வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
மதுரை: டிகிரி முடித்தால் கடற்படையில் வேலை..!

இந்திய கடற்படையில் SSC Officer உள்ளிட்ட பணிகளுக்கு 260 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக பணிக்கேற்ப ரூ.1,10,000 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 09.08.2025 முதல் 01.09.2025 ம் தேதிக்குள் <
News August 11, 2025
மதுரை:வீட்ல கரண்ட் இல்லையா.? இத பண்ணுங்க

மதுரை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம்
94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.