News October 20, 2025
மதுரையில் சிறுமி கர்ப்பம்-சிறுவன் கைது

மதுரை கள்ளிக்குடி அரசபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கர்பமடைந்துள்ளார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 9, 2026
மதுரை அருகே இளைஞர் பரிதாப பலி…

தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் ஆத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் மகேந்திரன்(20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் டூவீலரில் ஆண்டிபட்டி பங்களாவிலிருந்து வாடிப்பட்டி சென்ற போது சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலால் தடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் மீது பின்னால் வந்த கனரக லாரி ஏறியதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

சமயநல்லூரை சேர்ந்த புஷ்பவனம் மனைவி தேவிஸ்ரீ (19), மதுரையில் உள்ள கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர் வீட்டில் தனியாக இருந்த போது நேற்று (ஏப்.08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.