News February 4, 2026

மதுரையில் கைதி தப்பி ஓட்டம் – அதிர்ச்சி

image

கோயமுத்தூர் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வந்த போது அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இயர்மான்(29) என்பவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து இயர்மான் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

மதுரை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

மதுரை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News February 8, 2026

மதுரை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

மதுரை அதிமுக பிரமுகர் கொலையில் பரபரப்பு தகவல்

image

சாமிநத்தத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான செந்தில்(35) நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் செந்தில் மனைவி காவியாவிற்கும், கார்த்திக் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் அதை செந்தில் கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதில் ஏற்கனவே 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று காவியா, கார்த்திகையும் கைது செய்தனர்.

error: Content is protected !!