News May 19, 2024
மதுரையில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை

மதுரை பரவையில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருபவர் கோபால். இவர் இன்று அதிகாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கோபால் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரை கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 29, 2026
மதுரை: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். *ஷேர்
News March 29, 2026
BREAKING மதுரை: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நிலையில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
மேலூர் – மதுரைவீரன்
மதுரை கிழக்கு – கார்த்திகேயன்
சோழவந்தான் (தனி) -கருப்பையா
மதுரை வடக்கு – கல்லாணை
மதுரை தெற்கு -பீட்டர்
மதுரை மத்தியம் – முஸ்தபா
மதுரை மேற்கு -தங்கபாண்டி
திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல்குமார்
திருமங்கலம் -சதீஸ்குமார்
உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்
News March 29, 2026
திருப்பரங்குன்றத்தில் தவெக சார்பில் நிர்மல்குமார் போட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


