News August 14, 2024
மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 5, 2025
மேலூர் பொதுப்பணித்துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
மதுரை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே மேல பனங்காடியை சேர்ந்தவர் கார்த்திக்(34). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து வந்தார். இதனால் மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கார்த்திக் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.


