News January 22, 2026
மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
Similar News
News April 9, 2026
மதுரையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

சமயநல்லூரை சேர்ந்த புஷ்பவனம் மனைவி தேவிஸ்ரீ (19), மதுரையில் உள்ள கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர் வீட்டில் தனியாக இருந்த போது நேற்று (ஏப்.08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
News April 8, 2026
மதுரை: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

மதுரை மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News April 8, 2026
மதுரை:தாசில்தார் லஞ்சம் கேட்டால் புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 0452-2531395 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


