News October 23, 2024
மதுரையில் ஒரே நாளில் 40 பேர் அதிரடி மாற்றம்

மதுரை மாநகராட்சியில் மேயர் நேர்முக உதவியாளர், உதவி கமிஷனர், பில் கலெக்டர்கள் என 40 பேரை ஒரே நாளில் இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்த உதவியாளர் முத்துராமலிங்கம், பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
Similar News
News February 13, 2026
மதுரை: பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி செல்வராணி (40). ரவிக்குமார் ராஜஸ்தானில் தோசை கடை வைத்துள்ளார். செல்வராணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்திரமோகன்(32). இவர் சிவா மாருதி கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, மனைவி சிந்து அதை கண்டித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற சந்திரமோகன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து தனது அறைக்கு சென்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
மதுரை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

மதுரை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <


