News January 31, 2026
மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியர்

மதுரை எச் எம் எஸ் காலனி அருணாச்சலேஸ்வரர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி இசக்கி நாச்சியார். தம்பதியர் இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு மோசடி செய்ததாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
Similar News
News January 31, 2026
மதுரை: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News January 31, 2026
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News January 31, 2026
மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு நிரந்தரமாக வேலை கிடைக்காமல் மதுரைக்கு திரும்பி வந்தார். இங்கும் சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


