News April 5, 2025
மதுரையில் ஏப்.10ம் தேதி டாஸ்மாக் இயங்காது

மதுரையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 5, 2025
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.
News April 5, 2025
மதுரை மக்களே உஷார்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

மாநிலத்தின் பல பகுதியில் தக்காளிக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தோலில் சிவப்பு நிற அரிப்பு ஏற்படுத்தும் மற்றும் பரவும் அபாயம் உள்ள நோயாகும். தங்கிய நீர், அசுத்தமான சூழல் போன்றவை இதன் முக்கிய காரணங்கள் என்பதால், பொதுசுகாதார நிபுணர்கள் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
News April 5, 2025
மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.