News December 17, 2025
மதுரையில் எலி மருந்து குடித்து தற்கொலை

மதுரை ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்தவர் ராமக்கோடி (62). இவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வீட்டார் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று எலி மருந்தை அருந்தியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக G.H-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமக்கொடி உயிரிழந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
BREAKING:மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று மதுரை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரவீன் குமார் வெளியிட்டார். இதில் ஆண்கள் 11,58,601 பெண்கள் 12, 01,319, மூன்றாம் பாலினத்தவர் 237 என மொத்தம் 23,60,157 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என மொத்தம் 3,80,474 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
News December 19, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 19, 2025
மதுரை: LIC பெண் மேலாளர் இறப்பில் மர்மம்: மகன் புகார்

மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்தில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி 54 சாவில் மர்மம் இருப்பதாக அவர் மகன், லட்சுமி நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில்: தீ விபத்து நடந்த போது எனக்கு போன் செய்த தாயார் போலீசை கூப்பிடுங்க போலீசை கூப்பிடுங்க என்றார். அவரது மரணம் விபத்தால் நிகழ்ந்தது அல்ல, அலுவலக கதவு பூட்டப்பட்டிருந்தது, எனவே தாயாரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.


