News October 14, 2025

மதுரையில் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

மதுரை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 69 காலியிடங்கள் உள்ளன. 10th படித்தால் போதும். முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்திற்கு சென்று அங்கு APPLY -ஐ கிளிக் செய்து பெயர், முக்கிய விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

திருப்பரங்குன்றத்தில் தங்கரத புறப்பாடு ரத்து

image

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் தங்கி விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் திணை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவை வழங்கப்படும். மேலும் பக்தர்கள் கோயிலுக்குள் தங்கியிருப்பதால் அக்டோபர் 22 முதல் 28 வரை கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டும் என திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 14, 2025

மதுரையில் ஜிம் மாஸ்டர் இறப்பு

image

அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் 37. ஜிம் மாஸ்டரான இவர், பெற்றோரை பிரிந்து நண்பர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அக்.4ல் ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாத பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்.11ல் இறந்தார். பெற்றோர் எங்குள்ளனர் எனத் தெரியாததால் உடலை ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் நீடிக்கிறது. விபரம் அறிந்தவர்கள் திருப்பாலை இன்ஸ்பெக்டருக்கு 82488 28080 ல் தகவல் தெரிவிக்கலாம்.

News October 14, 2025

மதுரை அருகே போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

image

நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோயில் உள்ளது. கோயில் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்புகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக போஸ்டர் அடித்தனர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் நேற்று வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்

error: Content is protected !!