News October 19, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News October 21, 2025
மதுரையில்…23 வயது வாலிபரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

உசிலம்பட்டி தாலுகா எஸ்.ஐ., சேகர் தலைமையில் போலீசார் ஆரியபட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில்வந்த திருப்பரங்குன்றம் நாகராஜ் 25, விஷ்ணுகுமார் 23, ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 21, 2025
மதுரைக்கு ரெட் அலர்ட்… எச்சரிக்கை

மதுரையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மின்பாதிப்புக்கு மதுரை வடக்கு தமுக்கம், தல்லாகுளம், 94458 52932,கே.கே.நகர், உத்தங்குடி- 94458 52851, புதுார், சூரியாநகர் – 94458 52847, மேலமடை, வண்டியூர் – 94458 52849, மேலும் பல பகுதிக்கு வேண்டுமானா SHARE செய்து பார்ட்.2 என கமெண்ட் பண்ணுங்க.
News October 20, 2025
மதுரை வழி திருநெல்வேலி – சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப நாளை மறுநாள் திருநெல்வேலி – எழும்பூர் சிறப்பு அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 22 ம் தேதி இரவு 11.55 க்கு நெல்லையிலிருந்து கிளம்பி மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் விருதுநகர்,மதுரை, திண்டுக்கல் , திருச்சி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.