News January 8, 2026
மதுரையில் இறைச்சி விற்க தடை

மதுரையில் திருவள்ளுவர் தினமான 16ஆம் தேதி மாநகரில் இறைச்சி விற்க தடை அறிவிப்பு இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ஆம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Similar News
News February 1, 2026
மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை மாற்றம்

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்களில் பிப்ரவரி மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, மும்பை விரைவு ரயில் ஹௌரா அதிவிரைவு ரயில் (எண்:12666) மற்றும் ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்:07229) ஆகியவை மதுரை, திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News February 1, 2026
மதுரை: இதை தெரிஞ்சுக்க இனி அலையாதீங்க.. ஒரு CLICK போதும்

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News February 1, 2026
மதுரை: மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி.!

மேலூரைச் சேர்ந்தவர் சரவணன் 57 கட்டட தொழிலாளியான இவர், ஜெய்ஹிந்த்புரம் தென்றல் நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வீட்டில் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். ஜன.28ம் தேதி அன்று சரவணன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


