News October 25, 2024
மதுரையில் இன்றைய நிகழ்வுகள்

➤ உலக உடற்காய தினம், மதுரை அரசு மருத்துவமனை,காலை 11 மணி
➤ இலவச தீபாவளி புத்தாடைகள் உணவு வழங்கும் நிகழ்ச்சி, நகர்புற வீடற்றோர் தங்கும் இல்லம், தானப்ப முதலி தெரு, காலை 11 மணி
➤ சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், காந்தி மியூசியம், காலை 10.30 மணி
➤ பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, கென்னட் கிராஸ் ரோடு, காலை 9 மணி
Similar News
News September 17, 2025
மதுரை: அக்.மாத சிறப்பு ரயில்களின் விவரம்

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 29ஆம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 6, 13, 20 ,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2:45 மணிக்கு மதுரை ர மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் மதுரை வருகை

மத்திய நிதித்துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி மதுரை வருகை தர திட்டமிட்டு இருக்கிறார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வியாபாரிகள் சங்கம் சார்பாக 80வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வியாபாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
News September 17, 2025
மதுரை: +2 முடித்த பெண்கள் கவனத்திற்கு!

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி இளநிலை பிஏ ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், புவியியல் & இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் முதுநிலை தாவரவியல் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்