News August 12, 2024
மதுரையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.
Similar News
News March 6, 2026
FLASH மதுரை: மின்சாரம் தாக்கி தந்தை & மகன் பலி

வாடிப்பட்டி, நாராயணபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி(79). இவரது மகன் அரசு பஸ் டிரைவர் ஆதிநாராயணன்(55) இவரது தம்பி மகன் கல்லூரி மாணவர் கிருஷ்ணன்(20). 3 பேரும் தோட்டத்தில் மாட்டு தீவனம் சேகரித்த போது மின்சார வயர் அறுந்து கிருஷ்ணனின் மேல் விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற மற்ற இருவர் உள்பட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிநாராயணன் & கிருஷ்ணன் பலியாயினர். சின்னதம்பி சிகிச்சையில் உள்ளார்.
News March 6, 2026
மதுரை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 6, 2026
மதுரை: 710 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி ஓங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 16,471 மாணவர் 18,033 மாணவியர் உள்பட மொத்தம் 34,504 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வை 16,069, மாணவர் 17,725 மாணவியர், மொத்தம் 33,794 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 544 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


