News November 15, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை மாவட்டத்தில் அண்ணா பேருந்து நிலையம், ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.15) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 15, 2025

திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம்

image

திருமங்கலம் மறவன் குளம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால் அவர் ரயில் மோதி இருந்தாரா, அல்லது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து உடலை கைப்பற்றி மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

மதுரையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை

image

மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் (நவ.12) 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு வார காலத்திற்கு இரவில் மட்டும் பணிகள் நடைபெறுவதால், அந்த பகுதியில் எந்த ஒரு வாகனத்திற்கு அனுமதி இல்லை எனவும் பகலில் வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

மதுரை: டிராக்டர் மோதி டூவீலரில் சென்றவர் பலி.!

image

திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணி (59), என்பவர் டூவீலரில் மங்கல்ரேவு அத்திப்பட்டி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜம்பலாபுரம் அருகே பேரையூரைச் சேர்ந்த இளையராஜா (34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி இன்று உயிரிழந்தார். டிராக்டர் டிரைவரை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!