News July 19, 2024
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்

மதுரை ரயில் நிலையம் ரூ. 347.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதை, ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2025ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 30, 2025
மதுரை மாநகராட்சி நடைபாதை விற்பனைக்குழு தேர்தல்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஆறு பேர் கொண்ட விற்பனை குழு தேர்ந்தெடுப்பிற்கு செப்.29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பான விவரங்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வேட்புமனு தாக்கல் துவக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 30, 2025
மதுரை: ரூ.1.5 இலட்சம் வரை சம்பளம்!

மதுரை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
News August 30, 2025
மதுரை மாநகராட்சியில் காளைகளை பிடிக்க ஒப்பந்தம் நீட்டிப்பு

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சாலைகளில் வெற்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை பிடிப்பதற்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆறு மாதத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டித்து மதுரை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.