News April 9, 2025

மதுரையில் அஜித் படம் வெளியாவதில் புது சிக்கல் 

image

நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

Similar News

News April 28, 2025

மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் நான்கு பேர் பணியிட மாற்றம். மதிச்சியம் காவல் ஆய்வாளர் வேதவல்லி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு.

News April 28, 2025

மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 28, 2025

ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

image

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!