News April 26, 2024

மதுரையிலிருந்து புறப்பட்டார் கள்ளழகர்

image

மதுரை அழகர் மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பாடான கள்ளழகர் 23 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளினார். இந்நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை பூ பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க அழகரை மனமுருக வழியனுப்பி வைத்தனர்.

Similar News

News August 10, 2025

கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

image

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 10, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News August 10, 2025

JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!