News December 18, 2025
மதுரைக்கு சிறப்பு ரயில்.. இன்று முக்கிய அப்டேட்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை – தாம்பரம் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நெல்லை – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06166) நெல்லையில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.
Similar News
News December 21, 2025
மதுரை: மன அழுத்தத்தில் தோட்டத்தில் இளைஞர் தற்கொலை

மதுரை வாகைகுளத்தை சேர்ந்தவர் காசி தேவர் மகன் சுப்பிரமணி(32). திருமணமகாத இவர் மது போதைக்கு அடிமையாக, வீட்டில் அதை கண்டித்துள்ளனர். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கீழப்பனங்காடி விவசாய தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 21, 2025
மதுரை: 21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர்

கடந்த (03.12.24) மதுரை LIC மேம்பாலம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 65 வயது கோபால் என்பவரை “காவல் கரங்கள்” அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக திருநகரில் உள்ள தாய்மடி இல்லத்தில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் முகவரி கண்டறியப்பட்டு, சாத்தூரில் வசிக்கும் அவரது மனைவியிடம், காவல் துணை ஆணையர் அனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்