News May 16, 2024
மதுரை:கனமழை முதல் அதி கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News October 17, 2025
ரூ 5 கோடியில் திருமலை நாயக்கர் மஹாலில் டிஜிட்டல் ஒலி ஒளி காட்சி

மதுரையில் சரித்திர அடையாள பெருமைகளில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மஹாலில் நடத்தப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சி சுற்றுலா பயணிகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது பழுதடைந்த இந்த காட்சி சேவையை புதுப்பிக்க ரூ 5 கோடி செலவில் லேசர் ஒலி ஒளி 3 டி புரஜக்சன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் தயாராகிவரும் ஒலி ஒளி காட்சி பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேவை டிசம்பருக்குள் துவக்கப்பட உள்ளது.
News October 17, 2025
மதுரையில் சோகம்… தீபாவளிக்கு வந்தவர் தற்கொலை

மதுரை பழங்காநத்தம் ஆர்சி தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் 26 தஞ்சாவூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி மனைவிக்கு ஜவுளி எடுக்க அசோக் குமார் மதுரை வந்தார். இங்கே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் அசோக் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
மதுரை: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.