News August 17, 2024

மதுபோதையில் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ், முருகவேல்(34) ஆகியோர் நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், நாகராஜ் ஆத்திரமடைந்து மது போதையில் உருட்டுக் கட்டையால் முருகவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், முருகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News January 2, 2026

திருவள்ளூரில் சிவன் நடனமாடிய கோயில்.. உங்களுக்கு தெரியுமா ?

image

இந்த கோயில் நாசராஜரின் ஐந்து நடன சபைகளில் முதல் ரத்தின சமையாகும். சிவன் இங்கு “ஊர்த்துவ தாண்டவம்” எனும் நடனம் ஆடினார். பேராலமரம் காட்டில் இடம் பெற்றதன் காரணமாக இந்த சிவன் வடாரண்யேஸ்வரர் eன வழிபடப்படுகிறார். இக்கோயிலில் திருமணம் தடை நீக்கம், சனி பிரச்சினைகள், பணப்பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விசேஷ பலன் இருப்பது ஐதீகம். இதை ஷேர் பண்ணி இந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு போய்ட்டு வாங்க

News January 2, 2026

திருவள்ளூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 2, 2026

திருவள்ளூர்: இளைஞர் பரிதாப பலி!

image

பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஸ்துராஜ். இவரது மகன் அஜித் சாமு(24) நேற்று முன் தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திர அடுத்த மொளச்சூர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!