News March 31, 2024
மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுதலை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் விடுதி உரிமையாளர் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்
Similar News
News September 26, 2025
தி.நகரில் உயர்மட்ட பாலம் 28-ம் தேதி திறப்பு

சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தியாகராயர் நகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட உயர்மட்ட சாலை வரும் ஞாயிறு அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. உஸ்மான் சாலை – சி.ஐ.டி. நகரை இணைக்கும் 1.2 கி.மீ உயர்மட்ட சாலை வரும் 28-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. ரூ.164.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே வாகனங்கள் ஏறி, இறங்க அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசி பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்

டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். அவ்விருதை விஜயகாந்த் சமாதியில் வைத்து பாஸ்கர் ஆசி பெற்றார். இக்காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 25, 2025
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.