News June 1, 2024
மதுபான கடைகள் மூட உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி

தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 தொடா்பு கொள்ளலாம்.
News August 21, 2025
விநாயகர் சிலையை நிறுவ விண்ணப்பிக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் இளவரசி மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்