News June 22, 2024
மதுபான கடத்தலை தடுக்க டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் இதனை தொடர்ந்து புதுவை காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி நேற்று டிஜிபி ஸ்ரீனிவாசை அழைத்துப் பேசினார். அப்போது பிற மாநிலங்களுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடந்து செல்லப்படுவதை தடுக்க வேண்டும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Similar News
News August 30, 2025
புதுச்சேரி: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

புதுச்சேரி மக்களே சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே வரியை ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தி, வீண் அலைச்சலை தவிர்க்கலாம். இதற்கு இந்த லிங்கை <
News August 30, 2025
புதுவை பொதுப்பணித்துறையில் பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரிந்து, பணிநிறைவு பெற்ற ஓவர்சியர் கோவிந்தனுக்கு பாராட்டு விழா, துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில், செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, கோவிந் தனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 30, 2025
வரும் எட்டாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவையில் மின்துறையைத் தனியாரிடம் கொடுத்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம் மற்றும் பிற அமைச்சா்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி INDIA கூட்டணிக் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். முக்கிய நகரப் பகுதிகளில் தீ பந்த ஊா்வலம் நடைபெறும்.” என தெரிவித்துள்ளனர்.