News February 10, 2025
மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பெண்கள் கைது

கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெண்ணிலா (57). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் குளத்துமேட்டில் வசிக்கும் ரேவதி (43) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 49 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News March 9, 2026
தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
தி.மலை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
தி.மலை: கைக்குழந்தையுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பெரியார் தெருவை சேர்ந்த நடராஜன் (38), அவரது மனைவி பிருந்தா (28) ஆகியோர் தொழில் தொடங்க தாட்கோவில் கடனுக்கு முயற்சி செய்துள்ளனர். லோன் கிடைக்க தாமதமானதால், கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 9) மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களைத் தடுத்து, கைது செய்தனர்.


