News November 2, 2024
மதுக்கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சென்னையில், சமீபகாலமாக மதுக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாட்டிலுக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் ‘சஸ்பெண்ட்’ செய்யுமாறு மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வரும் நவ.22 தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 அறிவிப்பு
சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவுக்கான (CIBF-2025) அறிவிப்பு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. “தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும் எனும் உயரிய இலக்கோடு, 2025ஆம் ஆண்டுக்கான சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை (2 3 நாட்கள்) சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படவுள்ளது” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் 23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் நாளை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க