News January 8, 2026

மதிய உணவு திட்டத்தில் ₹2,000 கோடி ஊழல்!

image

ராஜஸ்தானில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் சுமார் ₹2,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கோவிட் காலத்தில் (காங்., ஆட்சி) இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் விதிகளை மீறி டெண்டர் வழங்கியதோடு, போலி பில்கள் மூலம் அரசு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

திமுகவில் இருந்து விலகினார்.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

image

நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் சொன்ன காரணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெல்லையிலிருந்து ஏராளமான கனிமவளங்கள் கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதுகுறித்து உங்களிடம் (ஸ்டாலின்) பலமுறை எடுத்துக்கூறியும், எந்த பலனும் இல்லை என்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

News January 11, 2026

இந்திய அணிக்கு டஃப் கொடுக்கும் நியூசிலாந்து

image

வதோதராவில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-ல் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் இருவரும் 50 அடித்து நியூசிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். 21 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. வரும் ஓவர்களில் இந்தியா விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே நியூசிலாந்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியும். முன்னதாக, 4 ரன்னில் நிக்கோலஸின் கேட்ச்சை குல்தீப் தவறவிட்டார்.

News January 11, 2026

மக்கள் விரும்பாத கட்சியாக மாறிய காங்கிரஸ்: குஷ்பு

image

MGNREGA திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து காங்., நடத்தும் போராட்டத்தை ஒரு ஏமாற்று வேலை என குஷ்பு சாடியுள்ளார். நாட்டிற்காக உழைத்த பல தலைவர்களின் பெயர்களை திட்டங்களுக்கு வைக்க சொல்லி காங்., போராட்டம் நடத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். காங்., ஆட்சியில் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டியதாக குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்., மாறிவிட்டது என்றும் கூறினார்.

error: Content is protected !!