News April 16, 2025
மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

உத்திரமேரூர், ஓங்கூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் 39 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு, சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சத்துணவு அமைப்பாளர் பாக்கியலட்சுமி, சமையலர் மேரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
News April 16, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (ஏப்ரல்.17) காலை 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
News April 16, 2025
காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: நடவடிக்கை தேவை

காஞ்சிபுரத்தில், ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பல இடங்களில் தற்போது வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.