News June 27, 2024

மதகுகளை தயாராக வைத்திருக்க கமிஷனர் அறிவுறுத்தல்

image

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களின் மதகுகளை மழை நீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 26, 2025

கோவை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ

image

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

News December 26, 2025

கோவை: மின் தடையா..? உடனே CALL

image

கோவை மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 26, 2025

BREAKING: கோவையில் மீண்டும் மீண்டுமா?

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்ககு கடந்த இரண்டு மாதங்களாக, அடையாளம் தெரியாத மர்மநபர்களால், இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று 22வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!