News September 3, 2025

மண் அள்ளுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

image

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரியில் வண்டல் மற்றும் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மண் அள்ளுவதால் பருவமழையால் கிடைக்கும் அதிக நீரைத் தக்கவைக்கவும், நிலத்தடி நீரை பெருக்கி விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Similar News

News September 5, 2025

தாம்பரத்துடன் நிறுத்தப்படும் ரயில்கள் அறிவிப்பு

image

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை சில விரைவு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மலைக்கோட்டை, மதுரை பாண்டியன், திருச்சி சோழன், ராமேஸ்வரம் சேது மற்றும் ராமேஸ்வரம் போட் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News September 4, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்.04) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்

News September 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

error: Content is protected !!