News August 24, 2024
மண்வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை ஏரிகளில் இலவசமாக மண்வெட்டி எடுத்து வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று மாலைக்குள் ஏரிகளில் இருந்து மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: மனமுடைந்த மதுபிரியர் விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: புத்தந்தூரை சேர்ந்த பெரியசாமி குடிப்பழக்கம் கொண்டவர். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை?

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சகி கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி பல்கலை தேர்விற்கு செல்போன் எடுத்து சென்றதால் பேராசிரியர் கண்டித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து கல்லூரியில் இருந்து சென்றவர் கோட்டைமேடு பகுதியில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வீசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற பைக் மீது கார் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


