News September 21, 2025
மண்மங்கலம் அதிமுக ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து, கரூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
Similar News
News September 21, 2025
கரூர்: பாஜக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு

கரூர் மாவட்டம், கரூர், மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் இன்று ( 21. 09. 2025 ) அமைச்சர் நாயனார் நாகேந்திரன் ஆலோசனைப்படி, கரூர் பாஜக தலைவர் வி வி செந்தில்நாதன் அவர்கள் கீழ்க்கண்ட பொறுப்புகளை பாஜக நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார். கிருஷ்ணராபுரம் பெருமாள் இளைஞர் அணி, கரூர் மேற்கு ஒன்றியம் பிரியா ஈஸ்வரன் மகளிர் அணி, கா பரமத்தி வடக்கு ஒன்றியம் தங்கதுரை பட்டியல் அணி பொறுப்பு வழங்கள்
News September 21, 2025
கரூர்-ஈரோடு இந்த ரயில் செல்லாது!

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பின்படி, கரூர்-ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண்: 56809) செப். 22, 25, 28, 30 ஆகிய 4 நாட்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.20 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில், கரூர் ரயில் சந்திப்புடன் நிறுத்தப்படும். அங்கிருந்து ஈரோடு நோக்கிச் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
கரூரில் 6பேர் போலீசாரால் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அண்ணாநகர் சீத்தக்காடு பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார் ஜெகன் 31, ரஞ்சித்குமார் 29, கார்த்திகேயன் 42, சந்தானம் 40, ஆறுமுகம் 42, அரவிந்த் கார்த்திக் 23 ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.1230 பறிமுதல் செய்தனர்.