News December 31, 2025

மண்ணுலகை விட்டு மறைந்தார் (கடைசி PHOTO)

image

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் நேற்று முதல் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெற்ற தாயின் உடலை, தனது தோளில் சோகத்துடன் மோகன்லால் தூக்கி செல்லம் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. தாயின் பிரிவால் மிகுந்த மனவேதனையுடன் இருக்கும் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

AI எங்கிருந்து தகவல்களை பெறுகிறது தெரியுமா?

image

AI என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படக் கூடிய கணினி தொழில்நுட்பமாகும். ஆனால் AI-க்கு மனிதர்களைப் போல நேரடியாக அனுபவமோ அல்லது உணர்வோ கிடையாது. அது செயல்படுவதற்குத் தேவையான தகவல்களை பல்வேறு தளங்களிலிருந்து பெறுகிறது. அவை என்னென்ன தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 2, 2026

ஜோதிமணியின் பதிவு அதிர்ச்சியளிக்கிறது: SP

image

அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வதாக <<18740431>>ஜோதிமணி<<>> SM-ல் பதிவிட்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்கும்போது, அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என செல்வப் பெருந்தகை(SP) தெரிவித்துள்ளார். ஜோதிமணி மாவட்டத்தில்(கரூர்) உட்கட்சி பிரச்னை இருப்பது உண்மையே, தான் அதை தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News January 2, 2026

பாகிஸ்தான் மோசமான அண்டை நாடு: ஜெய்சங்கர்

image

பயங்கரவாதத்தில் இருந்து மக்களை காக்க இந்தியாவிற்கு முழு உரிமை உண்டு என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை IIT-யில் பேசிய அவர், பாகிஸ்தானை ‘மோசமான அண்டை நாடு’ என விமர்சித்தார். ஒருபக்கம் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு கொண்டு, மறுபக்கம் தண்ணீர் கேட்க முடியாது என்று கூறிய அவர், இந்தியா தனது பாதுகாப்பிற்காக என்ன செய்ய வேண்டும் என யாரும் சொல்லத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!