News March 23, 2024
மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

கரூர் மக்களவை பொதுத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பொது தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
Similar News
News September 19, 2025
கரூர்: டாஸ்மாக் பார் தகராறு: 5 பேர் கைது!

குளித்தலை ராஜேந்திரம் வாலாந்தூரைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்ற போது, ஏற்பட்டவாய் தகராறில், திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த கிருபானந்தன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், இருவரையும் பீர் பாட்டில். இரும்பு கம்பியால் தாக்கியதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனர்.
News September 19, 2025
கரூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் தீர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’, கரூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட தாந்தோணி சட்டமன்ற தொகுதியில் இன்று (செப்.19), வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் விஜயபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News September 19, 2025
கரூர்: 116 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள ஆதனூரைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 116) தன்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். அவருக்கு 2 மகன்கள், 5 பெண் குழந்தைகள், 15 பேரக்குழந்தைகள் மற்றும் 18 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை மரணமடைந்த நிலையில், அவரது உடல் பூந்தேரில் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.