News January 15, 2025
மண்டபம் – மதுரை சிறப்பு ரயில் ஜன.17 முதல் ரத்து

வாரம் மும்முறை பராமரிப்பு பணிக்காக மண்டப – மதுரை இயங்கிய கன்னியாகுமரி – ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் பெட்டிகள் இனி ராமேஸ்வரம் பணி மனைக்கு மாற்றப்படுகிறது. இதனால் மண்டபம் – மதுரை இடையே திங்கள், வெள்ளி கிழமைகளில் இயங்கிய முன் பதிலில்லா சிறப்பு ரயில் (வ.எண் :06780) ஜன.17 முதல் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 10, 2025
ராமநாதபுரம்: டூவீலர் மோதி பரிதாப பலி!

திருவாடனை அருகே கோவனி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (50) நேற்று பொருட்கள் வாங்க கடைக்கு திருச்சி – ராமேஸ்வர சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாடி டூவீலரில் வந்த ஒருவர் ஆரோக்கியசாமி மீது மோதினார். அவரை மீட்டு தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவாடனை போலீசார் விபத்து ஏற்படுத்திய முருகேசனை தேடி வருகின்றனர்.
News December 10, 2025
ராமநாதபுரம்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல்கரை பகுதியில் உள்ள பேராவூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கருவேல மரங்களுக்குள் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீஸார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


